14322 இலங்கையில் ஐக்கிய நாடுகள்.

ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம். கொழும்பு: ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). (12), 56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ. ஐக்கிய நாடுகளின் ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெளியீடு. முதலாம் பகுதியில், அறிமுகமாக, இலங்கையில் ஐக்கிய நாடுகள் பற்றிய பொது நோக்கு, ஐ.நா.செயலாளர் நாயகத்தினதும், இலங்கை வெளிவிவகார அமைச்சரினதும், ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளரினதும் செய்திகள் என்பன இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் இலங்கையில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் அமையங்களும் முகவராண்மைகளும் பற்றிய தகவல்களும், இலங்கையில் வதிவிட அலுவலகங்களைக் கொண்டிராத முகவராண்மைகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17160).

ஏனைய பதிவுகள்

12263 – நீதிமுரசு 2009.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 241 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12927 – கசடற: ஓய்வுபெற்றோரை வாழ்த்தும் பனுவல் 2010.

சத்தார் எம்.பிர்தௌஸ் (பிரதம ஆசிரியர்), ஏ.ஆர்.நி‡மத்துல்லா (பிரதம பதிப்பாசிரியர்). கல்முனை: வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, ஜனவரி 2010. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்ஸ்). xxviii இ (22), 171 பக்கம், புகைப்படங்கள், விலை:

14171 வட்டுக்கோட்டை – தெக்கணப்பாய் கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஷ்வரர் ஆலய கும்பாபிஷேக மலர். மலர்க் குழு.

வட்டுக்கோட்டை: கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயம், மூளாய் வீதி, தெக்கணப்பாய், வட்டுக்கோட்டை மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (100) பக்கம், புகைப்படங்கள், விலை:

12022 – அனர்த்த காலங்களில் நெருக்கீடுகளை எதிர்கொள்ளல்.

அனர்த்தகால உளநலப் பணிக்குழு. யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14

14437 க.பொ.த. (உயர்தரம்) தமிழ்: மாதிரி வினா-விடை பகுதி 1,2.

காரை செல்வராசா. யாழ்ப்பாணம்: காரை. செல்வராசா, எக்கலம் கல்வி நிலையம், மனோகராச் சந்தி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 98 பக்கம், விலை: ரூபா 22.00, அளவு: 18×12.5