14322 இலங்கையில் ஐக்கிய நாடுகள்.

ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம். கொழும்பு: ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). (12), 56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ. ஐக்கிய நாடுகளின் ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெளியீடு. முதலாம் பகுதியில், அறிமுகமாக, இலங்கையில் ஐக்கிய நாடுகள் பற்றிய பொது நோக்கு, ஐ.நா.செயலாளர் நாயகத்தினதும், இலங்கை வெளிவிவகார அமைச்சரினதும், ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளரினதும் செய்திகள் என்பன இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் இலங்கையில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் அமையங்களும் முகவராண்மைகளும் பற்றிய தகவல்களும், இலங்கையில் வதிவிட அலுவலகங்களைக் கொண்டிராத முகவராண்மைகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17160).

ஏனைய பதிவுகள்