தேசிய கல்வி நிறுவகம். மகரகம: வணிகக் கல்வித்துறை, விஞ்ஞான தொழினுட்பப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). ix, 85 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20.5×29.5 சமீ. 2017ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட இவ்வளநூலில் அறிமுகம், தேசிய பொது நோக்கங்கள், பொதுத் தேர்ச்சித் தொகுதி, பாடத்திட்டத்தின் நோக்கங்கள், தேசிய பொது நோக்கத்திற்கும் பாடத்திட்ட நோக்கத்திற்கும் இடையிலான தொடர்பு, தரம் 12இற்கான பாடத்திட்டம், தரம் 13இற்கான பாடத்திட்டம், பாடசாலைக் கொள்கையும் வேலைத்திட்டங்களும், கணிப்பீடும் மதிப்பீடும் ஆகிய எட்டு இயல்களில் விடயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65684).
16697 மக்கத்துச் சால்வை, மருமக்கள் தாயம்.
எஸ்.எல்.எம். ஹனீபா (மூலம்), சிராஜ் மஷ்ஹூர் (தொகுப்பாசிரியர்). அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய