14400 காம ன் கூத்து இலங்கை மலையகத் தமிழர் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு.

பொன். பிரபாகரன். கொழும்பு: புதிய பண்பாட்டு அமைப்பு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). ஒஒiii, 127 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISDN: 978-955- 42176-0-7. சுமார் 2500 ஆண்டுக்கால வழிபாட்டைக் கொண்ட காமன் வழிபாடு இன்றும் மலையகத்தின் சில பகுதிகளில் இடம்பெறுகின்றது. நூலாசிரியர் இவ்வழிபாட்டின் வழியமைந்த காமன் கூத்து வடிவம் பற்றிய நாட்டார் இலக்கியக் கூற்றினை இந்நூலில் ஆய்வுசெய்துள்ளார். காமன்கூத்தின் வரலாறு, அவற்றின் பாத்திரங்கள், ஒப்பனைகள், அணிகலன்கள், கதையமைப்பு, பாடல்கள் என்ற பல்வேறு அம்சங்களையும் விரிவான ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். காமன்கூத்து ஒரு வரலாற்று அறிமுகம், மலையக சமூக வரலாற்றில் காமன்கூத்து, பண்டைத்தமிழர் பண்பாட்டில் காமன் மன்மதன் வரலாறும் கருத்தியல் வளர்ச்சியும்-இலக்கிய சாட்சியங்கள், காமன்கூத்து மலையகத் தமிழரின் மரபுரிமை அறிவியலும் தொழில்நுட்பமும், மலையகக் கூத்தின் தனித்துவமும் மண்வாசனையும், அரசியல் அதிகாரமற்ற மக்களின் போராயுதமாக பண்பாடு, பாரம்பரிய கூத்துக்களின் நிகழ்வெளியை பெயர்த்தல் பண்பாட்டுக் கறுவறுப்பின் தொடக்கம், திறந்தவெளி சமூக பாடசாலையாக காமன்கூத்து ஆகிய எட்டு அத்தியாயங்களில் இவ்வாய்வு விரிவாக எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14379 க.பொ.த.(உயர தரம் ) பாடத்திட்டம்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1 B, P.T. டீ சில்வா மாவத்தை). 108 பக்கம்,