14401 சம்பூர்ண அரிச்சந்திரா நாட்டுக்கூத்து.

ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (புனைபெயர்: செகராசசிங்கம்), செல்லையா மெற்றாஸ்மயில் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், 21, முதலாவது ஒழுங்கை, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ஹரிஹரன் பிறின்டேர்ஸ், 47, காங்கேசன்துறை வீதி). xii, 80 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ. அயோத்திய மன்னனான அரிச்சந்திரனையும் அவனது துணைவியார் சந்திரமதியையும் பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்ட இந்நாட்டுக்கூத்தில், அரிச்சந்திரனின் மந்திரியான சத்தியகீர்த்தி, தரகனான நட்சத்திரையன், தேவர்உலகு அரசனான இந்திரன், பிரம்மபுத்திரனான நாரதர், மகரிஷிகளான வசிட்டர், விசுவாமித்திரர், பிராமணரான காலகண்டர், அரிச்சந்திரனின் மகனான லோகிதாசன், மாயானம் காப்போனான தோட்டி, மற்றும் காசி அரசன் ஆகியோர் பிற பாத்திரங்களாவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45855).

ஏனைய பதிவுகள்