14402 நாட்டார் பாடல்கள்(தொகுப்பு).

சு. சுசீந்திரராசா, A. சண்முகதாஸ், M.A. நுஃமான், செ.வேலாயுதம்பிள்ளை. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1976. (ஹோமகம: கூட்டுறவு அச்சகம்). (6), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இந்நூலில் நாட்டார் பாடல்களை பத்து பிரிவுகளாக வகுத்துத் தொகுத்துத் தந்துள்ளனர். வாழ்த்துப் பாடல் (மருத்துவிச்சி வாழ்த்து), தாலாட்டுப் பாடல்கள் (அணில் கோதா மாம்பழமே/ முதிர விளைஞ்ச முத்து/ முத்தாக நீயொருத்தன்/ தம்பி குதிபாய்வான் தன் தாயார் மடிமேலே/ கோவலரே நித்திரையோ/ சீதேவி நித்திரைசெய்/ உபதேசப் பிள்ளை தாராட்டுச் சிந்து), விளையாட்டுப் பாடல்கள் (சாய்ந்தாடு பாவா/ கிட்டியடித்தல்/ கும்மி-1/கும்மி-2/ கோலாட்டம்/ கொம்பு விளையாட்டு/ ஊஞ்சற் பாட்டு), வேடிக்கைப் பாடல்கள் (சந்தமாமா/ ஏண்டி குட்டி/ எலிப் பாட்டு/ சிங்கிலி நோனா), காதற் பாடல்கள் (காதலன் கூற்று/ காதலி கூற்று/ தோழி கூற்று/ காதலன் பிரிவுணர்த்தல்/ காதலர் சல்லாபம்), தொழிற் பாடல்கள் (ஏற்றப் பாட்டு/ ஏர் பூட்டும்போது பாடும் பாடல்/ ஏர்ப்பாட்டு/ அரிவி வெட்டுப் பாடல்/ அறுவடைப் பாடல்/மீன்பிடிகாரர் பாடல்/ தோணிக்காரன் பாடல்/ தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பாடல்/ சாலை அமைப்போர் பாடல்), ஒப்பாரிப் பாடல்கள் (தாயாரின் ஒப்பாரி/ மனைவியின் ஒப்பாரி/ சீரழிவை யார் மதிப்பார்/ மையத்துப் புலம்பல்), வசந்தன் பாடல்கள் (முயிற்று வசந்தன்/ கிறுகு வசந்தன்/ களரி வசந்தன்), நாடகப் பாடல்கள் (அனுவுருத்திர நாடகம்/ அப்பாஸ் நாடகம்), கதைப்பாடல்கள் (கட்டபொம்மு கதை/ சைத் தூன் கிஸ்ஸா) ஆகிய பிரிவுகளின் கீழ் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் விளக்கக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02499).

ஏனைய பதிவுகள்

Casinospel Utan Svensk Tillstånd

Content Utför Någon Insättning Därför att Anträda Testa! How The Odju Online Casino Site Fryst vatten Picked Dom Any Casino Apps Pay Faktisk Money? Vilket