சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் நடேசன் பொன்னம்பலம் அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, கெருடாவில், வடமராட்சி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ்). 14 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. அமரர் நடேசன் பொன்னம்பலம் அவர்களின் ஞாபகார்த்தமாக ஈழத்தில் வழங்கி வரும் நாட்டார் பாடல்கள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளார். நாட்டாரியல் இன்று உலகெங்கும் மானிடவியல் சார்ந்த ஆய்வாக விரிவடைந் துள்ளது. நாட்டாரியலின் ஒரு பகுதியாகிய நாட்டார் பாடல்களிலே எமது மக்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கையினைக் காணமுடிகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை பின்னிப் பிணைந்துள்ள நாட்டார் பாடல்கள் இன்றும் எமது மக்களிடம் வாய்வழியாகவும் பேணப்பட்டு வருகின்றது.