வெற்றிமகன் (இயற்பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ. இந்நூல் நாட்டார் வழக்கியலில் புதியதொரு பரிமாணத்தை இனம்காட்டுகின்றது. சுதேச விளையாட்டுக்களுடன் கூடிய பாடல்களை இனம்காட்டும் அதே வேளையில் சுதேச விளையாட்டுக்கள் சிலவற்றையும் எமக்கு அறிமுகம் செய்கின்றது. தோற்றுவாய், கிராமிய இலக்கியச் செல்வங்கள், நாலாதிசையிலும் நாடோடி இலக்கியம், கிட்டி விளையாட்டு (பாட்டு), தும்பி விளையாட்டு, கண் பொத்தி விளையாட்டு, ஆடு-புலி விளையாட்டு, தெப்ப விளையாட்டு ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22109).