14427 தமிழ் அகராதியியலின் பரிணாமம் மற்றும் பரிமாணம்: நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு-ஆய்வரங்க மலர் (முதலாம் பாகம்).

சதாசிவம் சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், Institut International des Etudes Superieures, 70, Rue Philippe de Girard 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 245 பக்கம், விலை: 15 இயூரோ, அளவு: 24×18.5 சமீ., ISBN: 978-29-51012- 23-3. நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிசில் 28,29 செப்டெம்பர் 2019இல் நடைபெற்றது. இவ்வாய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் அகராதியியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். இதில் தமிழில் முதல் இருமொழி அகராதி (எச்.சித்திரபுத்திரன்), உலக அகராதியியல் வரலாறு அல்லது உலகச் சொற்புத்தக வரலாறு 6528 மொழிகள் (சதாசிவம் சச்சிதானந்தம்), தமிழ் அகராதிகளின் உருவாக்கத்தில் பேச்சு வழக்குச் சொற்களின் முக்கியத்துவம் (சுபதினி ரமேஸ்), தொல்காப்பியத்தில் பிறந்து நிகண்டுகளில் தவழ்ந்து அகராதிகளில் வளர்ந்த தமிழ் அகராதியியல்-ஓர் ஆய்வு (இ.பாலசுந்தரம்), தமிழ்ச் சொற்பிறப்பியலின் பிதாமகன் சுவாமி ஞானப்பிரகாசர் (விமலா பாலசுந்தரம்), உலக அகராதி உருவாக்கமும் தமிழ் அகராதியும் (ருவியே கமல்ராஜ்), ஈழத்தில் தமிழ்-சிங்கள அகராதி முயற்சிகள்: கேள்வியும் ஆக்கமும் (முகம்மது அஸ்ரப்), நிகண்டுகளும் அகராதிகளும் (சாம் தில்லையா), ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் ஆரம்பநிலை இலக்கிய வரலாற்றெழுதியல் முயற்சிகள்: நோக்கும் போக்கும் (கி.விசாகரூபன்), ஆவணவாக்க நோக்கில் வழக்குச்சொல் அகராதிகள்-இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்களை மையமாகக் கொண்ட ஆய்வு (மைதிலி விசாகரூபன்), தொல்காப்பியமும் நிகண்டும் (ப.சாந்தி), சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் இலக்கியச் சொல் அகராதி (எஸ்.சிவலிங்கராஜா), காகித வடிவ அகராதிக்கும் மின் அகராதிக்கும் உள்ள ஓர் ஒப்பீடு (தலிஞர் முருகையா), இணையத் தமிழ் அகராதிகள் (சந்ரிகா சுப்பிரமணியன்), டேனிஷ்- தமிழ் -ஆங்கில மருத்துவக் கையேடும் அகராதியும் (வி.ஜீவகுமாரன்), இலங்கையில் தமிழ்-சிங்கள மற்றும் சிங்கள-தமிழ் அகராதி முயற்சிகள்: ஒரு விமர்சன நோக்கு (மல்லிகாதேவி நாராயணன்), ஆர்னால்ட் சதாசிவம்பிள்ளையும் இலக்கிய வரலாற்று எழுத்தியலும்: பாவலர் சரித்திர தீபகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு (ஜே.ஹர்சனா), தமிழ் அகராதியியலில் சமஸ்கிருத தாக்கமும் சமஸ்கிருத அகராதியியலில் தமிழ்மொழியின் தாக்கமும் (பத்மபிரியா ராகவன்), தமிழ்ச் செவ்வியல் அகராதிகள் (ந.தேவி), மட்டக்களப்புத் தமிழகத்தில் பிரதேச வழக்குச் சொற்கள் (முருகு தயாநிதி), புலவர் வரலாற்றெழுதுகையில் ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளையின் பங்களிப்பு (பாஸ்கரன் சுமன்), புலம்பெயர் நாடுகளில் தமிழ் அகராதியியல்: வேறுபட்ட பார்வை (ச.ஞானா பியாற்றிஸ்), தமிழ் அகராதிஇயலின் பரிணாமம் மற்றும் பரிமாணம் (பெஞ்ஜமின் இலெபோ), இலங்கைத் தமிழ் அகராதிக்கான தேவை (நடராசா ஸ்ரீரஞ்சன்), அமெரிக்க மிஷனரிமார் தொகுத்த அகராதிகள் (எஸ்.ஜெபநேசன்), தமிழ் அகரவரிசை: மரபும் தவறுகளும் (விருபா குமரேசன்), Tamil Dictionaries in Russia (Alexander Dubyanskiy), Macro Structure of Amarakosa and Tivakaram: A comparison (V.Jayadevan), அகநானூறு பழையவுரை- Contribution of Anonymous Old Glosses to the Tamil Lexicon (Eva Wilden), Things as certain as dictionaries and taxes, can be more firmly believed (Gregory James), Contribution of Tamil Words to English Dictionary- An Etymological Study (K.S.Antonysamy ஆகிய 31 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12256 – மேதின வரலாறும் அதன் போதனைகளும்.

வீ.எல்.பெரைரா (பொதுச் செயலாளர்). கொழும்பு 12: மலையக இளைஞர் பேரவை, 74. 2/1, டாம் வீதி, 1வது பதிப்பு, மே 1978. (அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5

14844 ஞாபகிக்கத்தக்கதோர் புன்னகை.

கெக்கிறாவ ஸுலைஹா. கெகிறாவ: கெக்கிறாவ ஸுலைஹா, 32/21, செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15