14442 பேச்சுத் தமிழ்(Katana Demala Basa).

எஸ்.சுசீந்திரராஜா, எஸ்.தில்லைநாதன், அபேசிங்க ஜயக்கொடி. ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, கோட்டே வீதி, 10ஆவது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு: அரச பதிப்பகத் திணைக்களம்). xiv, 364 பக்கம், அட்டவணைகள், அளவு: 21×13.5 சமீ. அரசகரும மொழிகள் கொள்கையை பயனுள்ள வகையில் செயற்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலே பல வேலைத்திட்டங்கள் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக இந்நூல் வெளியீடும் அமைந்துள்ளது. சிங்கள அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை பேச்சுத் தமிழைக் கற்கும் வகையில் இதிலுள்ள பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந் நூல் 2007.02.09ஆம் திகதிய அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 3/2007இல் குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சி மட்டம் IIII இலக்காகக் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65460).

ஏனைய பதிவுகள்

13020 வெற்றிமணி: 25வது ஆண்டு பூர்த்தி மலர்: கால் நுற்றாண்டு வெற்றிச் சுவடுகள்.

மு.க.சு.சிவகுமாரன் (பிரதம ஆசிரியர்). ஜேர்மனி: வெற்றிமணி, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).116 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இலவசம், அளவு: 30×21 சமீ. 1950இல்

14515 தமிழ் மரபில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் நடிப்புப் பண்பாடு.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (16), 17-54 பக்கம், புகைப்படங்கள்,

12018 சிறுவர் உளநலம் : ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர் கைந்நூல்.

சா.சிவயோகன், கோகிலா மகேந்திரன், தயா சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு: பிரின்ட் கெயார் பக்கேஜிங் லிமிட்டெட், 21, ஸ்ரீ