எஸ்.ஜே.யோகராஜா. கொழும்பு 15: எஸ்.ஜே. யோகராஜா, 65ஃ322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டB, புளுமெண்டால் வீதி). x, 71 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 28.5×21.5 சமீ., ISBN: 955-95655-8-3. தமிழ் மொழி படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு பேச்சுத் தமிழ் படிக்கும்போது உதவும் வகையில் இந்நூல் 7 பாடங்களாக வகுத்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி பேச்சு மொழி, எழுத்து மொழி என இருவகைப்படும். இரண்டும் வேறுபட்டவை. இரண்டுக்கும் இலக்கணமுண்டு. இந்நூலில் பேச்சு மொழிக்கும் இலக்கிய மொழிக்கும் உள்ள வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. சொற்கள், எண்கள், வேற்றுமை, காலம், முக்கியமான சொற்கள், வினைச்சொற்களின் பல வடிவங்கள், வாசிப்பு ஆகிய ஏழு பாடங்களையும், கலந்துரையாடல், உசாத்துணை நூல்கள் என மேலும் இரு தலைப்புகளையும் இந்நூல் கொண்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28395).