எரிக்கு.L.பொன்சேக்கா, P.P.G.L.சிறீவர்த்தனா (ஆங்கில மூலம்), வே.பேரம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறீமதிபாயா, 58, சேர் ஏணெஸ்ட் டி சில்வா மாவத்தை, மீள்பதிப்பு, 1978, 1வது பதிப்பு, 1957, 2வது பதிப்பு, 1967, மீள்பதிப்பு, 1974, (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானாலுவ). xii, 193 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. எரிக்கு.L.பொன்சேக்கா, P.P.G.L.சிறீவர்த்தனா ஆகியோரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்று கொழும்பு H.W.Cave and Company நிறுவனத்தால் 1957இல் வெளியிடப்பட்ட Practical Chemistry என்ற நூலின் தமிழாக்கம். அல்லுலோகங்கள், உலோகங்கள், சேதனவுறுப்புச் சேர்வைகள், கனமானப் பகுப்பு, பண்பறி பகுப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35296)