சொல்லாய்ந்த குழுவினர். கொழும்பு 7: அரசகரும மொழி அலுவல் பகுதி, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 421, புல்லர்ஸ் வீதி, 3வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு, 1957, 2வது பதிப்பு, 1963. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (8), 228 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. அரசகரும மொழி அலுவல் பகுதியினரின் கல்விப் பிரிவினரால் வெளியிடப் பெற்றுள்ள இக்கலைச்சொற்றொகுதியின் தயாரிப்பில் ஈடுபட்ட சொல்லாய்ந்த குழுவில் கலாநிதி மோ.தம்பையா, திரு.வே.அரியரத்தினம், தா.வே.அரியநாயகம், கலாநிதி வ.பொன்னையா, திரு. அ.வி.மயில்வாகனன், திரு.செ.உ.வேதநாயகம் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். பொதுத் தகுதிப் பத்திரத் தேர்வின் தாவரவியற் பாடத் தேவைக்கு வேண்டிய கலைச்சொற்கள் யாவும் இங்கு இடம்பெற்றுள்ளன. சில தாவரவியற் சொற்கள் தமிழ் வடிவாக்கப்பட்டுள்ளன. வகுப்பு, கோத்திரம், தொகுதி ஆகியவற்றுக்கு ஏற்கெனவே தமிழில் வழங்கப்பெற்ற சொற்கள் கட்டளைச் சொற்களாகப் பட்டுள்ளன. வேண்டியவிடத்து, குறியீடுகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48129).