ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம். ஐக்கிய அமெரிக்கா: யுனிசெவ், 3 யூ.என்.பிளாசா, நியுயோர்க் NY 10017, 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). xvii, 172 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18 சமீ., ISBN: 92-806-3664-2. இப்பிரசுரம் யுனிசெவ்பின் உதவியுடன் சுகாதார, போசாக்கு, நலன்புரி அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியகத்தால் இலங்கைவாழ் மக்களுக்குரிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் தரிக்கும் கால இடைவெளி, பாதுகாப்பான தாய்மை, சிறுவர் விருத்தி, தாய்ப்பால் ஊட்டுதல், போசாக்கும் வளர்ச்சியும், தடுப்பு மருந்து வழங்கல், வயிற்றோட்டம், இருமல் தடிமல் மற்றும் மிக அபாயகர மான நோய்கள், சுகாதாரம், மலேரியா, எச்.ஐ.வி./எயிட்ஸ், விபத்துக்களைத் தடுத்தல், பேரழிவுகளும் அவசரகால நிலைமைகளும் ஆகிய தலைப்புகளில் இந்நூல் ஆலோசனை வழங்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.