14489 ஆர்ட் லாப் (Art Lab) இதழ் 2.

ஜெகத் வீரசிங்க (பிரதம ஆசிரியர்), அனோலி பெரேரா (முகாமைத்துவ ஆசிரியர்), ஆனந்த திஸ்ஸகுமார, தா.சனாதனன், பாக்கியநாதன் அகிலன் (ஆசிரியர் குழு). கொழும்பு: தீர்த்த சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பு, இணை வெளியீடு, ஹ{வோஸ் நிறுவனம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). (4), 132 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 250., அளவு: 22×18 சமீ., ISBN: 1800-0320. இவ்வாய்விதழ் அரையாண்டிதழாக 2004 முதல் தமிழில் வெளியிடப்பட்டது. கலை மற்றும் பேறு தொடர்பான வெளியீட்டு வரிசை கட்டுரைத் தொகுதியாகும். சமகாலக் கலை, ஆடை அலங்காரக் கலை, கைப்பணி, கட்டடக் கலை, அரும்பொருளகவியல், தொல்பொருளியல், பேறு முகாமை மற்றும் பேறு முகாமைத்துவம், போன்ற துறைசார் படைப்பாக்கங்கள் இங்கு இடம்பெறுகின்றன. இவ்விதழில் பதிப்பாசிரியர் குறிப்பு (ஜெகத் வீரசிங்க), கலை தொடர்பான சிந்தித்தலின்/எழுதுதலின் வரலாறு அதாவது கலை வரலாற்றினை எழுதுதல் (ஜெகத் வீரசிங்க), கண்டி ஓவியப் பள்ளியின் “இயமனைத் தோற்கடித்தல்” ஓவியம் வழியாக கீர்த்தி சிறி இராஜசிங்க அரசனால் தோற்கடிக்கப்பட வேண்டிய மற்றவர் தொடர்பான விசாரணை (பிரசன்ன இரணபாகு), கலையின் அரசியல்: கதளுவாவின் நவமுனி விஹாரை ஒல்லாந்தச் சுவரோவியங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தொடர்பான ஒரு வாசிப்பு (சசங்க பெரேரா), புகைப்படங்கள் ஊடாக யாழ்ப்பாணத்து வரலாறு தொடர்பான ஒரு கணம் (சுஜாதா மகாலிங்கம்), Exhale: கராச்சி கன்வஸ் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நைஸா கானின் காட்சி (சலீமா ஹஷ்மி), எமது வாழ்க்கை உல்லாசப் பயணிகளுக்கான அஞ்சலட்டை அல்ல (தர்ஷன் அம்பலவாணர்), கடந்த காலமும் கழிவிரக்கமும்: மீண்டெழும் நினைவுகள் (பப்சி மரியதாசன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்