14503 விரலிசை: ஹார்மோனியம் கற்றலுக்கான வழிகாட்டி நூல்.

தவநாதன் றொபேட். யாழ்ப்பாணம்: தவநாதன் றொபேட், கலைத்திறள் வெளியீடு, தெட்சணாமணி இல்லம், இணுவில், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xii, 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ. வசாவிளானைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் இசைமாணிக் கற்கைநெறியில் முதற்பிரிவில் சித்திபெற்று, தற்போது அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். வட இலங்கை சங்கீத சபையின் முதலாவது கலாவித்தகர் பட்டத்தினைப் பெற்றவர். இந்நூல் ஹார்மோனியத்தின் சுருதிகளும் ஸ்வரங்களும், ஸ்வரஸ்தானங்கள், கமகங்களை வாசிக்கும் முறை, பயிற்சி செய்யவேண்டிய முறை, அறிவுரைகள் சில, ஆரோகண அவரோகணங்கள், ஸ்வர வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள், ஜதீஸ்வரம், ஸ்வரஜதி, திவ்ய நாம கீர்த்தனை, வர்ணங்கள், கீர்த்தனங்கள், சௌக்ககாலக் கீர்த்தனை, தேவாரம், நாட்டார் பாடல், திருப்புகழ், மெல்லிசைப் பாடல் ஆகிய 19 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்