14504 நடனம் (பரத நாட்டியம்).

சாரதாதேவி ஸ்ரீஸ்கந்தராஜா. திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக வித்தியாலயம், 56,உட்துறைமுக வீதி, உவர்மலை (கண்ணகிபுரம்), 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). (10), 54 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 32×20 சமீ. கல்லச்சுப் பிரதியாக வெளிவந்துள்ள நூல். கல்வி அமைச்சின் பரதநாட்டிய பாடத்திட்டத்திற்கு அமைவாக ஆண்டு 6 முதல் 11 வரையும் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தவும், வட இலங்கை சங்கீத சபையின் 1ஆம் 2ஆம் 3ஆம் தரங்களுக்கும் அமைவாகவும் தயாரிக்கப்பட்ட நூல் இது. தட்டிக் கும்பிடுவதின் நோக்கம், ஆரம்ப அடவு (தட்டடவு), த்யான ஸ்லோகம் (அரங்க தேவஸ்துதி, புஷ்பாஞ்சலி, நாட்டிய கிரமம்), மிருதங்கம், அசம்யுத ஹஸ்தம் (ஒற்றைக் கை முத்திரைகள் 28), ஸம்யுத ஹஸ்தம் (இரட்டைக் கை முத்திரை 24), அசம்யுத ஹஸ்த விநியோகங்கள் 28, சம்யுத ஹஸ்த விநியோகங்கள் 24, பாத்திரப் பிராணன், பஞ்ச நடை, தேவஹஸ்தம், நவக்கிரக ஹஸ்தம், தசாவதாரஹஸ்தம், பாந்தவஹஸ்தம், பாதபேதம்: மண்டபபேதம், ஸ்தாகைபேதம், உத்ப்னவனபேதம், பரமகி, ஸாரிபேதம், சிரஸ், திருஸ்டி, கிரீவா பேதம், அரும்பத விளக்கம் (பாவம், ராகம், தாளம், தாண்டவம், வாஸ்யம், நாட்டியதர்மி, லோகதர்மி, லயம், அட்சரகாலம், பஞ்சபானம், தீர்மானம், முத்திரை, கதி, கோர்வை), கிராமியம் என்றால் என்ன?, நம் நாட்டு கிராமிய நடனவகைகள், பாரத நாட்டு நடனவகைகள், 35 தாளங்களின் விபரம், நடன உருப்படிகள், புராண வரலாறு, உலகியல் வரலாறு, பாத்திர லட்சணம், அபாத்திர லட்சணம், சபாநாயகன், சபை, சபாலட்சணம். 12 மாதங்களும் சமய சம்பந்தமான பண்டிகைகளும், நான்கு வித அபிநயங்களின் உட்பிரிவுகளும் உபபிரிவுகளும் ஆகிய நடனத்துறை தொடர்பான ஆரம்ப பாடங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11083).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Gratis Ohne Eintragung 2024

Content Falls Dir Dieser Slot Gefällt, Bewerte Ihn! Book Of Ra Spielautomat Online Kostenlos & Um Echtgeld Spielen Faqs Hinter Book Of Ra Freispiele Allgemeine

14515 தமிழ் மரபில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் நடிப்புப் பண்பாடு.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (16), 17-54 பக்கம், புகைப்படங்கள்,

12302 – கல்வி வளர் சிந்தனைகள் (பாகம் 1).

சு.க.சீவரத்தினம் (புனைபெயர்: சுகசீவன்). யாழ்ப்பாணம்: கச்சாய்த் தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு, கச்சாய், சாவகச்சேரி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (சாவகச்சேரி: ஏ.ஆர்.எஸ். பிரின்டேர்ஸ்). xvi, (4), 58 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா