14505 பரத நாட்டிய செய்முறைத் தாள விளக்கம்.

சிறீதேவி கண்ணதாசன். சுழிபுரம்: பொன்னாலை சந்திர பரத கலாலயம், பறாளாய் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). xiv, 146 பக்கம், விலை: ரூபா 675., அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-50660-0-6. இலங்கைப் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற பரத நாட்டிய பாடத்திற்கான கலைத்திட்டத்திலே சேர்க்கப்பட்டுள்ள பரத நாட்டிய செய்முறை விடயங்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பந்தனை நல்லூர் பாணியிலான பரத நாட்டிய அடவுகளின் சொற்கட்டுகள் மற்றும் அலாரிப்பு முதல் தில்லானா வரையான உருப்படிகளின் செய்முறைகள், பாடல்கள் என்பன தாள அங்கக் குறியீடுகளுடன் எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. அடவு, அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், கௌத்துவம், பதவர்ணம், தில்லானா, பதம், கீர்த்தனம், சௌக்ககால கீர்த்தனம், அஷ்டபதி, ஜாவளி, தோடய மங்களம், யதி அமைப்பும் கோர்வை ஆக்கமும், திரிகாலத் தீர்மானம் ஆகிய 15 அத்தியாயங்களுடன், மேலதிகமாக க.பொ.த. சாதாரணதரம், க.பொ.த உயர்தரம், வட இலங்கைச் சங்கீத சபைப் பரீட்சை ஆகியவற்றுக்கான கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் தனித்தனி அத்தியாயங்களாக மேலும் மூன்று அத்தியாயங்களுமாக மொத்தம் 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Joe garage slot Dimaggio

Content Zweiter Weltenbrand Relationship With Charles Stanley Gifford And Norma Jeane Marilyn Monroe Had been Married 3 Times: Weltraum About Her Husbands Ladies Of The

14988 வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு.

கந்தையா பேரம்பலம். மிருசுவில்: க.பேரம்பலம், சிவபுரி, உசன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (நவாலி: ஐங்கர் கிராப்பிக்ஸ்). ஒடii, 137 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. முன்னைநாள்

12732 – மாணாக்கரின் காந்தி.

ஆர்.பாலகிருஷ்ணன்,T.L.M.புஹாரி. கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). (4), 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,