தேசிய கல்வி நிறுவகம். மகரகம: அழகியற் கல்வித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானபீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). vii, 42 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 29×20.5 சமீ., ISBN: 978-955-654-762-7. 2017ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதற்காகத் தயாரிக்கப்பட்ட துணை நூல். இதில் அபிநயம், தட்டடவு தாளம் 1-8 கார்வைகளுடன், நாட்டடவு தாளம் கார்வைகளுடன், தெய்ஹத் தெய்ஹி தாளம் கார்வைகளுடன், தா தெய் தெய் த தாளம் கார்வைகளுடன், தெய்யா தெய்யி தாளம் கார்வைகளுடன், சிரோ பேதம், பாத பேதம், வேப்பிலை நடனம், தத் தெய் தாம் தாளம் 1,2,3,6 கார்வைகளுடன், திருஷ்டி பேதம், கண்ட பேதம், பாத்திர லஷ்சணம், அபாத்திர லஷ்சணம், அரங்க தேவதாஸ்துதி, பரத நாட்டியம், வேடனும் புறாவும், கண்ணன் மாடு, தத் தெய் தாஹா தாளம் 1,2,3,4 கார்வைகளுடன், இசைக் கருவிகளின் வகைகள், நாதசுரம், இலங்கையில் பரதநாட்டியம் ஆகிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65670).