14516 தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்: தொகுதி நான்கு.

செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ, 1வது பதிப்பு, மார்கழி 1992. (கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ). xxiv, 256 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×14 சமீ. தமிழ்த் திரைப்படங்களின் அறுபது ஆண்டுக்கால வளர்ச்சியும் பெயர் அகரவரிசையும் இந்நூலின் பிரதான அம்சங்களாகும். அறுபதாண்டுக் காலத்தில் தமிழில் 4000 திரைப்படங்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளனவென்றும் அவற்றுள் வேற்றுமொழிப் படங்கள் 800 உள்ளனவென்றும் வருடாந்தம் 100 நேரடித் தமிழ்ப்படங்கள் சராசரியாக எடுக்கப்பட்டுள்ளனவென்றும் இந்நூலின் வழியாக அறியமுடிகின்றது. பொருளடக்க அகரவரிசைஃ தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் தகவல்கள்/ இத் தொகுதியில் உள்ள திரைப்படக் காட்சிகளின் அகரவரிசை/ இத் தொகுதியில் உள்ள திரைப்படக் காட்சிப் படங்கள் மூலமாக அறியப்படும் நடிகர் நடிகைகள்/ 1992ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப் படங்களின் அகரவரிசை/ 1992ஆம் ஆண்டில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் சிறப்புமிக்க சில விசயங்கள் ஆகிய இயல்களில் 359 தமிழ்த் திரைப்படங்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14586).

ஏனைய பதிவுகள்

Bitcoin Game Gambling establishment

Posts Better The brand new Crypto Gambling enterprises: play street magic slot machine Commitment Will pay: Constant No-deposit Also offers To own Established Professionals Type