14517 திரைப்படத்துறையில்.

கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (6), 7-96 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14 சமீ.,ISBN: 978-624-00-0197-7. திரைப்படத்துறை தொடர்பான தகவல்களும், திறனாய்வுகளும், ஊடகவியலாளர்கள் சிலரினதும் நூலாசிரியர்கள் சிலரினதும் பற்றிய சில பார்வைகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. திரைப்படத் திறனாய்வு, சினமா சினமா எனது பார்வை, எனக்கும் பிடித்த உலக சினமா, மலையாள தேசத்தில் சலனச் சித்திரங்கள், பிரஸன்ன விதானகேயின் “நீதிமன்றம் மொனமாயிற்று” ஒரு மனப்பதிவு, மாநகர மறைவுலகத்துள் ஒரு பிரவேசம், சிங்களப் படங்கள் பற்றிய விபரக் கொத்து, சினமாவில் புதிய அலை, இரவின் மூன்றாம் பாகம், கொரிய திரைப்பட விழாபெண்மையின் பிற கோணங்கள், மலையாள சினமா, ரதன் எழுதிய “ஒளி தேடும் நிழல்கள்”, சரோஜா, பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்கள், திரைப்பட விழாக்கள்-திறனாய்வுக்கு உதவுமா?, இலங்கையில் முதல் தடவையாக ஒரு மலேசியப் படம், சில இந்திய மொழிப் படங்கள்-சின்னச் சின்ன செய்திக் குறிப்புகள், பெண்ணியப் படங்கள் மூன்று-சின்னச் சின்ன குறிப்புகள், ஊடகவியலாளர் பார்வைகள்-கணபதி சர்வானந்தா எழுத்துக்களினூடாக சினிமாவைப் பார்த்த கே.எஸ்.சிவகுமாரன், யேசுராசா பற்றிய கட்டுரை- (கே.எஸ். சிவகுமாரன் பற்றிய குறிப்புகள்) கணபதி சர்வானந்தா, ரதனின் நூல் அறிமுக விழா-கே.விஜயனின் செய்தி விமர்சனம் ஆகிய 21 கட்டுரைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65502).

ஏனைய பதிவுகள்