இராஜசெல்வி சுஜந்தன். யாழ்ப்பாணம்: திருமதி இராஜசெல்வி சுஜந்தன், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: கிராப்பிக்ஸ் விஜய்). 36 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. ஓசைநயத்துடன் பாடக்கூடிய சிறுவர் பாடல்களைக் கொண்ட இந்நூலின் ஆசிரியர் கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். இந்நூல் நுட்பமான விடுகதைகள், சமூகம், சுகாதாரம், கல்வி சார்ந்த பாடல்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது. குழந்தைகளின் உலகம், அவர்கள் இரசிக்கும் விடயங்கள் எல்லாம் இங்கே சின்னச்சின்ன வரிகளில் அழகாகச் சொல்லப்படுகின்றன. அவர்களுக்குரிய போதனைகள், நற்சிந்தனைகள், கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகள் நற்பழக்க வழக்கங்கள் எல்லாம் குழந்தைகளுக்கேற்ற தமிழில் இதிலுள்ள தலைப்புகளற்ற 24 கவிதைகளிலும் அழகாகச் சொல்லப்படுகின்றன. குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களை இருட்டில் வழிநடத்தும் கைவிளக்காக ஆசிரியர் இந்நூலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.