14532 எங்கள் கிராமம்.

மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), இரா.சடகோபன் (தமிழாக்கம்). இராஜகிரிய: சரச (பிரைவேட்) லிமிட்டெட், 18/3, கிரிமண்டல மாவத்தை, நாவல, 1வது பதிப்பு, 2012. (இராஜகிரிய: KSU கிராபிக் பிறைவேற் லிமிட்டெட், 510, இராஜகிரிய வீதி). xx, 220 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-0201-19-8. மார்ட்டின் விக்கிரமசிங்க சிங்களத்தில் எழுதிய “அப்பே கம” என்ற இளையோருக்கான சிங்கள நூலின் மொழிபெயர்ப்பு. சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான 2012ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது, இந்நூலுக்கு 11.9.2013 அன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள 1960-1970 காலத்தையொட்டிய ஆசிரியரின் இளமைக்கால அனுபவங்களைத் தாங்கிய கதைகளினூடாக மறைந்துவரும் கிராமியக் கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை மீளநினைவுறுத்து கின்றார். பிள்ளைகளின் அழகிய உலகம், மனிதன் வேடனாக இருந்தபோது, மண்டூகங்களின் துயரம், பிள்ளைகளின் வனவாசம், பயந்தாங்கொள்ளி, புதிய உலகொன்றிற்குள் நுழைதல், வரித்துக்கொண்ட உணர்வுகள், மீன் பிடிக்கும் ஆசை, கிரிபாபாவின் கதை, கிரிபாபாவின் நகைச்சுவை, தொவில் நடனம் சாத்திரமல்ல, கிராமத்துக் கலைஞர்கள், நொத்தாரிஸ் அப்புவின் பொம்மலாட்டாப் பாவை, புண்ணியோத்சவ பூமி, அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும், கிராமத்து நாடகக் கலைஞர்கள், திருவிழா ஊர்வலம் பார்த்தல் ஆகிய 17 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சில சொற்களுக்கான பதவிளக்கம் இறுதியில் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்