செல்லையா குமாரசாமி. தென்மராட்சி: தென்மராட்சி கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், தென்மராட்சி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: வைரஸ் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி, இணுவில்). 82 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ. 11 அத்தியாயங்களைக் கொண்ட இச் சிறுவர்கதை, துணிவு, நாட்டுப்பற்று என்பவற்றை சிறுவர்களிடம் வளர்ப்பதாக அமைந்துள்ளது. கதைசொல்லியாக ஆசிரியரே இருந்து, சிறார்களை அதிசயத் தீவுக்கு அழைத்துச் செல்கிறார். இலகு மொழிநடையில் அமைந்த உரையாடல்களைக் கொண்டதாக நாவல் வளர்த்துச் செல்லப்படுகின்றது. செல்லையா குமாரசாமி, யாழ்ப்பாணம்- நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளராவார். 1956 ஆம் ஆண்டிலிருந்து வானொலி நாடகங்களில் நடித்துள்ள இவர், 1957 ஆம் ஆண்டில் அல்லி நாடகத்தினையும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்வில் தந்தையும் மகனும் நாடகத்தினையும் மேடையேற்றியவர். கவிஞராக, நாடக எழுத்தாளராக, நாவலாசிரியராகப் பல்துறை விற்பன்னராக விளங்கும் இவர், 50களில் அல்லி என்னும் மாதச் சஞ்சிகையையும் நடாத்தியுள்ளார். மேலும் இவர் கிள்ளை விடு தூது, கூடில்லாக் குஞ்சுகள், மண்ணைத் தொடாத விழுதுகள் ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
Royal Flamingo Casino Review
Articles Enjoy the beach within this Oceanfront house having pond merely actions aside! And, you’ll find non-money teams happy to let participants with playing problems.