14552 மருதம் கலாசார விழா சிறப்பு மலர். 2005.

மலர் வெளியீட்டுக் குழு. வெல்லாவெளி: கலாசாரப் பேரவை, பிரதேசச் செயலகம், போரதீவுப் பற்று, 1வது பதிப்பு, 2005. (களுவாஞ்சிக்குடி: பப்ளிக்கேஷன் அச்சகம், பட்டிருப்பு). ஒii, 63 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. சமூகப் பிரமுகர்கள், அரச நிர்வாகிகளின் வாழ்த்துச் செய்திகளுடன் வெளிவந்துள்ள இம்மலரில் தமிழ்மொழி வாழ்த்து, போரதீவுப்பற்று கலாசார கீதம் (க.நல்லரெத்தினம்), வெல்லாவெளியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்பாள் (மு. பேரின்பராசா), போரதீவுப் பற்று பிரதேச வளங்களும் வளங்களினூடான வெளிப்பாடும் (சுந்தரேசன்), சுனாமி (கடற்கோள்) உருவாக்கமும் அதன் தாக்கமும் (த.விவேகானந்தம்), காலம் என்பது-கவிதை (த.சேரலாதன்), சமகாலத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் ஒரு நோக்கு (ச.கணேசமூர்த்தி), எயிட்ஸ் இடம் பெயர்வு-கவிதை (சாம்பகீ), எமது பிரதேசத்தில் மறைந்து செல்லும் கலைகளும் ஊக்குவிக்க மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்களும் (வே.ஆ.புட்கரன்), ஆயகலைகள் அறுபத்திநான்கும் இவை, மட்டக்களப்பின் மாண்புமிகு மரபுக் கூத்துக்கள்:வடமோடி-தென்மோடி (க.தருமரெத்தினம்), நீங்கள் விரும்பினால், இயற்கையின் சீற்றம்-கவிதை (க. வினு), மனித குலத்துக்கு கிடைத்த மாபெரும் அருங்கொடை (கே.ஜெயராஜா), இன்றைய அரசியலும் இலங்கையும் (ஆர்.கோபாலபிள்ளை), போரதீவுப் பற்றில் வேள்ட் விஷன் (பி.விபாஞ்சனி), சிறுவர்களின் உலகை அவர்களுக்கே பெற்றுக் கொடுப்போம்- கவிதை (செல்வி. சோ.சோதிமலர்), கௌரவிக்கப்படும் கலைஞர்கள், கலாசார விழா போட்டி முடிவுகள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37386).

ஏனைய பதிவுகள்

14412 இலங்கையில் தமிழியல் ஆய்வுகள்.

அ.சண்முகதாஸ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 268 பக்கம், விலை: ரூபா

14453 க.பொ.த.(உயர்தரம்) இணைந்த கணிதம்: பெறுதிகளின் பிரயோகம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம், பானலுவ).

14306 இலங்கை மத்திய வங்கி: அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் முக்கிய பண்புகள் 2002.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன்