14582 எல்லையற்ற பெருவெளி.

க.முத்துராஜா. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xii, 90 பக்கம், விலை: ரூபா 450.,அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-98-5. கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளி கந்தசாமி முத்துராஜாவின் தேர்ந்த கவிதைத் தொகுப்பு இது. கனடாவில் இயங்கும் விளம்பரம், தமிழ் வணக்கம் ஆகிய இணையத்தளங்களிலும், அங்கு வெளிவரும் விளம்பரம் பத்திரிகையிலும் அவ்வப்போது பிரசுரமானவை இவை. கவிஞர் க.முத்துராஜா இலங்கையில் தபால் அதிபராகப் பணியாற்றியவர். முதுமாணிப் பட்டதாரியான இவர் ஒரு அரங்கக் கலைஞருமாவார். தனது சமூகத்துக்குக் கூறவேண்டியவற்றை நயம்பட உணர்ச்சியுடன் கூறுவதன்மூலம் இச்சமூகத்தை ஓரளவாவது தன் கவிதைகளால் மாற்றமுடியும் என்ற இதய தாகத்துடன் இத்தொகுப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். “மூத்த இனிய செம்மொழி” என்ற கவிதையில் தொடங்கி, “இனிய தமிழ் 2019 தைப்பொங்கல்” என்ற கவிதை ஈறாக 40 தேர்ந்த கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஜீவநதி வெளியீட்டகத்தின் 123ஆவது பிரசுரமாக இக்குறுநாவல் தொகுதி வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்