பால.சுகுமார். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4041-13-4. உலக இலக்கியத்தின் பெரும் தொகையான கவிதைகள் துன்பியல் உணர்வுகளையே விதம்விதமாகப் பேசுகின்றன. பிரிவுகளைப் பேசும் பாலைக் கவிதைகளே தமிழ் செவ்வியல் பரப்பிலும் அதிகம். 2004இல் சுனாமிப் பேரலைக்குத் தன் மகளை அவளது பிறந்தநாள் குதூகலத்தின் பின்னணியில் இழந்த ஒரு தந்தையின் சோகம் இங்கே வார்த்தைகளாக வார்க்கப்பட்டுள்ளது. இதுவரை நேசங்களை மட்டுமே பாடித் திரிந்த கவிதைகள் தமிழ்க் கவிதைப் பரப்பிற்கு அறிமுகமாகியிருக்க இன்று ஒரு தந்தையின் பாசத்தை பாடும் கவிதைகள் புது வரவாகின்றது. அவளது பிரிவின் சோகத்தில் தான் காணும் அனைத்தையும் தனது மகளாய் காணும் ஒரு தந்தையின், அவள் பிரிவின் பின்னரும் அவள் தன்னுடன் பயணிப்பதான உணர்வில் கரைந்துபோகும் ஒரு தந்தையின் புலம்பல் வரிகளாய் இக்கவிதைகள் உணர்வும் சதையுமாய் நம்முடன் பேசுகின்றன. இந்நூல் மகுடம் வெளியிட்டகத்தின் 19ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. வேலணை.கொம் (கனடா) இன் நிதி அனுசரணையில், தட்டுங்கள்.கொம் (கனடா) இன் ஊடக பங்களிப்புடன், மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலாண்டிதழ் வருடந்தோறும் வழங்கிவரும் “உலகப் பெரும் கவிஞர் பிரமிள் என்கிற தர்மு சிவராம் நினைவு, பிரமிள்விருது-2018” இற்கு இந்நூலும் தேர்வுபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.