14598 கறுப்பு வானம்.

நெடுந்தீவு முகிலன். சென்னை 600078: நீர் வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 72 பக்கம், விலை: இந்திய ரூபா 65.00, அளவு: 21×14 சமீ. “எனது நிலா சூரியன் உடுக்கள் கோள்கள் மின்னலைக்கூட எனது வானத்தில் இருந்து யாரோ களவாடி விட்டார்கள். இருட்டுக்கு பழகிய என் வாழ்தலில் கறுப்பு இரட்டிப்பாகிவிட்டது. கறுப்பை சோகத்தின் பாசையாகவோ தேசத்தின் பாசையாகவோ நான் அப்பிக்கொள்ளவில்லை. இருந்த வெளிச்சமும் அணைந்து புகையே மேலெழ இருண்ட தெருவில் பயணம் போகிறேன். வண்டல் வண்டலாய் என் வண்ணக் கனவுகள் இரண்டே விழிக்குள் பதுங்கியிருந்தன. இப்போது இறந்து கிடக்கின்றன. எங்கேயாவது மின்மினிப் பூச்சியைப் பார்த்தால் பின்னால் ஓடும் பழக்கமும் எனக்கில்லை. விண்வெளியில் பெரும் கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்குகின்றனவாம். கறுப்பு இங்கே என்னை துப்பி விட்டிருக்கின்றது. கறுப்பு என்பது ஒரு நிறம் அல்ல. அது எந்த நிறங்களினதும் இல்லாமையே. அதனால் தான் எனது வாழ்க்கையும் ஒத்துப்போகின்றது போலும். கறுப்பு எனது வானம் மட்டும் அல்ல. என் தேசமும் கூடவே விடுதலையும் தான்”(ஆசிரியர், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

bitcoin cryptocurrency

Cryptocurrency market China cryptocurrency Bitcoin cryptocurrency As the popularity and demand for online currencies has increased since the inception of bitcoin in 2009, so have