தானா. மருதமுத்து. ஹட்டன்: பாக்யா பதிப்பகம், இல. 4A, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (கொழும்பு 13: GOD Creative Lab). xix, 50 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-1805-07-4. பதுளையைச் சேர்ந்த இளம்கவிஞர் தானா மருதமுத்துவின் 25 கவிதைகளைக் கொண்ட முதலாவது கவிதைத்தொகுப்பு நூல். மல்லியப்பூ சந்தி திலகர் இந் நூலின் பதிப்பாசிரியராவார். பாடசாலையிலிருந்து இடைவிலகல் கண்ட மாணவனின் இலக்கியத் திறமையை இந்நூல் பறைசாற்றியிருப்பதிலிருந்து அவனது திறமை பாடசாலையில் கல்வியாளர்களால் இனம்காணப்படவில்லை என்ற வருத்தத்தை பதுளை கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஹாலிஎலவில் 11.11.2014 அன்று இடம்பெற்ற இந்நூலின் வெளியீட்டு விழாவில் சமூக ஆய்வாளர் வாழைச்சேனை ஏ.பி.இட்ரெஸ் முன்வத்தார். இந்நூலில் தானா மருதமுத்துவின் வாழியவே, தாய், உயிர்மூச்சு, கல்வி, அன்புக்கு உயிர்கொடு, உயிரே, தோள் நிறுத்து, என்னவர் காதல், உலகே தாழ் கிடக்கு, பெண் அடிமை இல்லையே, விலைமாது, கண்ணீரில் கரைத்த பொட்டு, வேலி, சிறகிழந்த கிளிகள், ஒரு வேளை சிரிப்பில், துயிலும் உள்ளம், இறைவா சாபமிடு, பொறுமையுடன் ஒருநாள், வீர வணக்கம், கலங்கி நில்லாரோ, இறைமனம் என்ன செய்யும்?, மொழிபேசும் இடைகள், இன்னல் துடைப்பாயா?, மரண முள், மரண சான்றிதழ் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.