14606 சிறு கீற்று (கவிதைகள்).

தாரணி இந்திரச்செல்வன். நுவரெலியா: வேலு இந்திரச்செல்வன், அலகல தோட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2011. (கொழும்பு 6: Fast Printers, 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை). 44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. மலையகத்தைச் சேர்ந்த வேலு இந்திரச் செல்வன்-தாரணி துரைராஜ் திருமண வாழ்வில் இணையும் வேளை முதல் பிரசவமாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்கள். வாழ்வை ஆரம்பிக்கும்போதே சமூகத்திற்காக வாழ்வோம் என்று அவர்கள் கவிதை மூலம் பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள். வேலு இந்திரச் செல்வன் அலகல தோட்டத்தைச் சேர்ந்தவர். க.பொ.த.உயர்தரத்துடன் ஆசிரியராகி கொட்டகல ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றவர். நு/வ/ரிலாமுல்ல தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். சென் லெனாட்ஸ் தோட்டத்தினைச் சேர்ந்த தாரணி சென்லெனாட்ஸ் தமிழ் வித்தியாலயம், ராகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆசிரியக் கல்வியைப் பெற்றவர். இவர் நு/ஹ/எலமுல்ல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்