லியோநிஷா பாலசிங்கம். வவுனியா: லியோநிஷா பாலசிங்கம், 273/4, 2ஆம் குறுக்குத் தெரு, கூமாங்குளம், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (வவுனியா: ஏ-பிரின்ட்). viii, 52 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-38879-0-0. செல்வி லியோநிஷா பாலசிங்கம் வவுனியா மாவட்டத்தின் இளமருதங்குளம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து வேப்பங்குளம் பங்கில் வாழ்ந்து வருகின்றார். வேப்பங்குளம் பங்கு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம், வவுனியா ரோட்றக் கழகம் என்பவற்றின் செயலாளராகப் பணியாற்றும் இவரின் கன்னிப் படைப்பாக இக்கவிதைத் தொகுதி வவுனியா FME நிறுவனத்தின் அனுசரணையுடன் வெளிவந்துள்ளது. இந்நூல்பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.”என் தாயுமான இறைவனை மனதிற் கொண்டும், ஆண்களை வெறுக்க எனக்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும், தாயாகி நின்று காக்கும் தாய் வழிச் சகோதரர்களின் நேசத்தையும், தாயுமாகி நிற்கும் அவர்களையும் இச்சமூகம் என்கண்முன் காட்டியவண்ணமே உள்ளது. தனக்குள் வாழும் தாய்மையை ஒவ்வொரு ஆணும் உணரும்போது, பெண்ணிற்கான பாதுகாப்பு, பெண்மீதான ஆணின் பொறுப்பு என்பன உணரப்பட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” ஒழியும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு. அதற்கான ஒரு தொகுப்பாக இந்நூலைப் படைத்துள்ளேன்”.