வே.ஐ.வரதராஜன் (மூலம்), வரதராஜா வித்தியாபரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xiv, 46 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ. “37 வருட அரசசேவை அனுபவம், மனம்கூச வைக்கும் சிறுமைகளும் ஏமாற்றங்களும் மிக்க வாழ்வு தந்த தரிசனம், வாசிப்பின் பேறாய் வாய்த்த பின்புல வீச்சு, என்பன என்னை எழுது எழுது எனத் தூண்டின” எனக் கூறும் வே.ஐ.வரதராஜனது ஆரம்பகாலக் கவிதைகள் மரபு சார்ந்தவையும் பக்திச்சுவை மிகுந்தவையுமாகும். இவருடைய “என் கடன்” கவிதைத் தொகுதியிலும் “தீக்கங்குகள்” என்ற இக்கவிதைத் தொகுதியிலும் உள்ள கவிதைகள் மரபை உடைத்துக் கொண்டு நவீனத்துவப் பிடிப்புடன் முகிழ்ந்தவையாகும். சராசரியான நடுத்தரக் குடும்பப் பின்புலத்தில் தோன்றிய வரதன்-தன்னைச் சூழ உள்ள மனிதர்களை, அவர்தம் உறவுகளை, உணர்வுகளைக் கையகப் படுத்தி அரிய கவிதைகள் பலதை நமக்குத் தந்துள்ளார். அத்துடன், அரச உத்தியோகம் தந்த அனுபவங்களையும் சமூக நிலைப்பட்ட தாக்க வலுவுடன் இவரால் தர முடிந்திருக்கிறது. இவரது அண்மைக்காலக் கவிதைகள் துல்லியமானவை. படிமச் செழுமையுடன் நவீன கவிதைக்கே உரிய சகல பண்புகளையும் கொண்டு விளங்குகின்றன. வாசிப்பும் ரசனையுமே தனது வாழ்வின் பேறாகக் கருதி வாழ்ந்து வந்த இவ்வரிய மனிதரின் சடுதியான முடிவு மிகுந்த துயரத்தைத் தருகிறது. இவரது இழப்பு தமிழுக்கும் தமிழ் ரசனைக்கும் ஏற்பட்ட தவக்குறைவாகும்” (க.சட்டநாதன்). இந்நூல் 51ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.
Red aces and faces hd casino Butterfly Meaning and you can Symbolism
Posts Aces and faces hd casino: Brownish Butterfly Meaning Butterfly as the Religious Book Launching Cockroach Symbolism: What Such Durable Animals Teach Us Go on