14627 நினைவுகள் துணையாக.

பொலிகையூர் ரேகா. ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Höhe 13, 58507 Lüdenscheid, 1வது பதிப்பு, மார்ச் 2020. (சென்னை 600 106: மலர்க்கண்ணன் பதிப்பகம், 24/1, பச்சையப்பா தெரு, சான்றோர் பாளையம், அரும்பாக்கம்). 86 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-945312-1-0. 1950இல் ஆசிரியர் மு.க.சுப்பிரமணியம் அவர்களால் தொடங்கப்பெற்ற சிறுவர்களுக்கான இதழ் வெற்றிமணி. சஞ்சிகை வெளியீட்டுடன் நில்லாது பல்வேறு படைப்பாளர்களின் நூல்களையும் வெளியிட்டுப் பெருமை கொண்டது. அதன் தொடர்ச்சியான பாரம்பரியத்தில் மற்றொரு முத்தாகவே இந்நூல் வெளிவந்துள்ளது. இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வாழும் பொலிகையூர் ஜெயாவின் காதல் கவிதைகளைக் கொண்ட கவிதைத் தொகுதி இதுவாகும். இது (1994இல்) ஜேர்மனில் தடம்பதித்துத் தொடர்ந்த வெற்றிமணியின் வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்படும் இலக்கியப் பிரசுரமாக அமைகின்றது. பொலிகையூர் ஜெயா தன் அகவுணர்வுகளை அழகியல் மொழிகொண்டு சிறப்பான காதல் கவிதைகளாக வடித்துள்ளார். இசையருந்தும் சாதகப் பறவையாக, மழைநீரருந்தும் சக்கரவாகப் பறவையாக, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாக காதலின் நினைவுகள் நோக்கியே ரேகாவின் உள்ளப்பறவை நூல் முழுவதும் வட்டமிடுகின்றது. இது வெற்றிமணியின் 25ஆவது வெளியீடாகும்.

ஏனைய பதிவுகள்

What Is a Virtual Deal Room?

A virtual deal room, also called a VDR (virtual data room), is a secure online space for sharing and storing important documents and sensitive information