ராஜகவி றாஹில். நிந்தவூர்-05: கரீமா ராஹில், ஆர்.கே. மீடியா, 318, புதிய நகரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (மாவனல்லை: பாஸ்ட் கிராப்பிக்ஸ்). xii, (4), 86 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×11 சமீ., ISBN: 978-955-567-9. இருபது கவிதைகள் கொண்ட தொகுப்பு. இலகுவான மொழிநடையில் கருத்துள்ள கவிதைகளாக அமைகின்றன. பூமியின் சுவாசம் என்ற கவிதை இயற்கை வளங்களை அழிக்கும் மனிதர்கள் பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் பேசுகின்றது. இரவுகள் வெள்ளை என்ற கவிதை துவேஷம், வெறி என்பனவற்றின் ஆதிக்கத்துக்குட்பட்ட மனிதத்தின் நிலை பற்றிக் கவலைகொள்கின்றது.
12857 – ஐங்குறுநூறு: மூலமும் உரையும்.
தி.சதாசிவ ஐயர் (பதிப்பாசிரியர்). சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டீ வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 1999. (சென்னை 600 014: வி.கருணாநிதி, தி பார்க்கர் கொம்பெனி, 293, அகமது கொம்பிளெக்ஸ், 2வது