14636 பார்வைகள் (கவிதைத் தொகுதி).

அபீர்ராஜன் (இயற்பெயர்: அன்ரனி பீற்றர்). யாழ்ப்பாணம்: அபீர்ராஜன், 36, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). viii, 84 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 42677-0-1. யாழ்ப்பாணக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய அபீர்ராஜனின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் இவை. அவரது மணிவிழா நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. உண்மைக்கு மிக நெருக்கமான இக்கவிதைகள், தனது நேர்கொண்ட பார்வையால், மனித வாழ்வின் அனைத்து முகங்களையும் ஆழத் தரிசிக்கின்றன. மேலான வாழ்வுக்கு உகந்த விழுமியங்களை ஆராதிக்கும் அதே வேளையில் சமூகத்தில் நிலவும் அநீதியான மேலாண்மைகளையும் கேடுகளையும் சாடிநிற்கின்றன. செம்மொழியாம் தமிழ் என்ற கவிதையில் தொடங்கி மருதமடு என்ற கவிதை ஈறாக இத்தொகுப்பில் அறுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்