14647 மனுவுக்கு மனு.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xxiஎ, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 4609-04-4. “மனு” என்ற சொல் மனிதனையும், அதே வேளை குறை அல்லது புகார் தெரிவித்து எழுதும் கடிதத்தையும் குறிக்கின்றது. மனுவுடன் மனு நடந்துகொள்ளும் நிலைகண்டு மனுவுக்கு-ஒரு மனுக் கொடுக்கலாம் எனச் சிந்தித்ததன் வெளிப்பாடாக இக்கவிதைத் தொகுதி உருவாகியுள்ளது. தனி மனிதனாகவும், குழுவாகவும், சமூகமாகவும், மனு மனுவுடன், மனு-மனுவோடு நடந்துகொள்ளும் நிலையினை ஆசிரியர் எண்ணிப்பார்த்தபோது மனிதன் ஏன் இத்தனை தூரத்துக்கு மலினப்பட்டுப் போய்க் கிடக்கிறான் என்ற சிந்தனை இக்கவிஞரின் உள்ளத்தில் எழுந்துள்ளது. தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களையும், தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் மையமாக வைத்துத் தன் இதயத்தை வருடிக்கொண்டும் நெருடிக்கொண்டும் இருந்தவற்றை அருட்திரு செ.அன்புராசா அடிகளார் இனிய கவிதைகளாக்கித் தந்துள்ளார். 2015-2018 காலகட்டத்தில் இக்கவிதைகள் ஜீவநதி, ஞானம், தாயக ஒலி, நான் ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தன. ஏற்கெனவே 13 நூல்களையும் 5 இறுவட்டுக்களையும் வெளியிட்டு தனது கலை இலக்கியப் பயணத்தைத் தொடரும் செ.அன்புராசா அடிகளாரின் இந்நூலில் 79 கவிதைகள் அடங்கியுள்ளன. இக்கவிதைகள் சமூகம் சார்ந்து பலதரப்பட்ட மனித நடத்தைகளை விமர்சிப்பவையாக அமைந்துள்ளன. இக்கவிதைகளில் விரவிநிற்கும் ஆசிரியது கவிதை மொழி தனித்துவமானதும் வீச்சானதுமாகும். ஆசிரியரது சமூகப்பார்வை புதிய நோக்குடையது. சமகால ஈழத்து அரசியல் பற்றியும் கவிஞர் பல கவிதைகளைத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14755 கடலின் நடுவில்.

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 4: கலாநிதி கே.எம்.எம்.இக்பால், கட்டையாறு, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (4), 60 பக்கம், விலை: ரூபா 150.,

14432 அரசகரும மொழிகள் தேர்ச்சி மட்டம் 1: தமிழ்.

அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8:

13A04 – கண்டிராசன் கதை.

சாரல்நாடன். சென்னை 600 098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-டீ, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 2வது பதிப்பு, நவம்பர் 2012, 1வது பதிப்பு, ஜுன் 2005. (சென்னை 600 014: பாவை

12186 – ஹரிஹர சுதன் தெய்வீகப் பாமாலை.

ஸ்ரீ ஐயப்பன் புனித யாத்திரைக் குழுவினர். கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், 17A, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்கழி 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ,