மு.நல்லதம்பி (மூலம்), ம.ந.கடம்பேஸ்வரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன், சிந்துபுரம், வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, மே 2016. (வட்டுக்கோட்டை: மாயன் பதிப்பகம், சிந்துபுரம்). x, 65 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41042-3-5. 01.06.1937இல் வட்டுக்கோட்டை மு.நல்லதம்பிப் புலவர் அவர்களால் கொழும்பு சாஹிறாக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக இயற்றப்பட்ட பாடல்கள் இவை. கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டிருந்த இப்பிரசுரத்தைப் புலவர், பண்டிதர் கடம்பேஸ்வரன் அவர்கள் 08.05.2016 அன்று இந்நூல் விரிவான வாசகர்களை சென்றடையும் வண்ணம் நூலுருவில் வெளியிட்டுள்ளார். முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி, கொழும்பு சாஹிறாக் கல்லூரியிலே தலைமைத் தமிழ் ஆசிரியராக இருபத்தெட்டு ஆண்டுகள் பணியாற்றி முஸ்லிம் மக்கள் மத்தியிலே தமிழார்வத்தை வளர்த்துவந்தவர். கொழும்பு சாஹிறாக் கல்லூரிக் கீதங்களும், இசைக் கலைக் கல்லூரி அமைப்புவிழா இசைப்பாடல்களும், வேறு சில ஆரம்பகாலக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒழுக்கம், அறநெறி, தூய்மையான வாழ்க்கைக்கான புத்திமதிகள், வேண்டுதற் பாடல்கள், கிராமியக் கலைப்பாடல்கள் என்பன இதில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63630).