14682 ஈழத்து உளவியற் சிறுகதைகள்.

கே.எஸ்.சிவகுமாரன் (ஆசிரியர்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஆதிலட்சுமி பிரிண்டேர்ஸ்). xxii, 74 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 17.5×12 சமீ. இத்தொகுப்பில் உறைவிடம் மேலிடம், தாழ்வு மனப்பான்மை, இனம் இனத்துடன், அவர்கள் உலகம், பகட்டு, இழை, குறிஞ்சிக் காதல் ஆகிய ஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு-புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கே.எஸ்.சிவகுமாரன். பெற்றோர்கள் திருகோணமலையையும் மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இலங்கையிலும் பின்னர் ஓமானிலும் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஈழத்துத்தமிழ்ப் படைப்பாளிகளை ஆங்கில ஊடகங்களின் வாயிலாக சிங்கள இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் இவர் முக்கிய பங்களிப்பினை வழங்கிவருபவர்.

ஏனைய பதிவுகள்

12272 – வரி விதிப்பு 1998/1999, 1999/2000, 2000/2001.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம். கொழும்பு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு அரசாங்க அச்சுத் திணைக்களம்). viii, 167 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ. இச்சிறு நூலானது

Antique Harbors

Blogs The auto Gamble Mode Café Gambling establishment Put off Reimburse Of all of the Player’s Deposits Fana is an author and you will posts

14501 பஞ்ச கதிகள்.

நல்லை க.கண்ணதாஸ். யாழ்ப்பாணம்: ஏழிசை வெளியீட்டகம், ஏழிசை மிருதங்க நர்த்தனாலயம், 203, புங்கன்குளம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). vi, (4),