14693 சமுதாய அகதிகள் (சிறுகதைகள்).

இளநெஞ்சன் முர்ஷிதீன். கொழும்பு 10: அல்லாமா இக்பால் பப்ளிகேஷன்ஸ், 239, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு 12: வீனஸ் பிரின்டர்ஸ்). 116 பக்கம், விலை: ரூபா 67.50, அளவு: 18.5×13 சமீ. தினபதி ஆசிரிய பீடத்தில் சிலகாலம் பணியாற்றிய B.M.முர்ஷிதீன் எழுதிய இஸ்லாமிய தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவை சிந்தாமணி வார மஞ்சரியில் பிரசுரமானவை. சமாதானப் பரிசு, வசந்தத்தை தேடும் மலர்கள், வாசமிலா ரோசாவொன்று, ஒரு பொருளுக்காக, காணாமல் போன நியாயங்கள், உண்மைகள் அழுகின்றன, சமுதாய அகதிகள், அவர்களும் நம்மவர்களே, வெளிச்சத்துக்கு வந்த உணர்வுகள், புதிய எழுச்சி, அறிமுகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இடையிடையே இவரது சிறுகதைகள் பற்றிய கருத்துரைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21630).

ஏனைய பதிவுகள்

Learning The newest Starburst Game

Content Starburst Faqs Optar Por Las Comunicaciones Del Local casino Starburst Slot Totally free Revolves And Features Starburst Wager Models, Rtp, & Variance Which, as

12335 – முரண்பாடு தீர்வுக்கான கல்வி: பயிற்றுநர் கைந்நூல்.

S.M.R.சூதீன் (தமிழாக்கமும், பதிப்பாசிரியரும்). மகரகம: ஆரம்பக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 2வது பதிப்பு, 1996, 1வது பதிப்பு 1995. (மகரகம: அச்சிடற் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம்). (8), 51 பக்கம்,