14694 சிவப்புக் கோடு: சிறுகதைகள்.

சி.சிறீறங்கன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xiv, 70 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958- 19-1. உயர்தர கணக்கீட்டு ஆசிரியராக கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் கடமையாற்றும் சிறீறங்கன், எமது சமூகத்தில் நடக்கின்ற அநீதிகளைக் கண்டு மனம்வெதும்பி அவற்றுக்கெதிரான குரலை இக்கதைகளில் பதிவுசெய்திருக்கின்றார். பல்வேறு காலச் சூழ்நிலைகளில் நாம் பட்ட இடர்ப்பாடுகளையும் சவால்களையும் சுட்டிக்காட்டுவது மட்டுமின்றி அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன அல்லது சமாளிக்கப்பட்டன என்பதையும் இக்கதைகள் வாயிலாக சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றார். இந்நூலில் சிவப்புக் கோடு, கனவு மெய்ப்பட வேண்டும், நீறு பூத்த நெருப்பாய், வலி தாங்கும் இதயம், மனிதத்தைத் தேடி, மாறாத வடுக்கள், கல்வியே எங்கள் மூலதனம், கல்லாதது உலகளவு, வாழ்க்கை வாழ்வதற்கே, புரிதல், தக்கணப் பிழைக்கும், விட்டில் பூச்சிகள் ஆகிய பன்னிரு கதைகள் இடம்பெற்றுள்ளன.இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 130ஆவது நூலாகும்.

ஏனைய பதிவுகள்

12339 – இந்து நாதம்: 1994.

கு.திவாகரன் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை:

12144 – திரு அருட்பா மாலை: வழித் துணைவன்.

கயிலைமணி அருள் சுவாமிநாதன், இந்திரா திருநீலகண்டன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: இடைக்காடு இந்து நெறிக் கழகம், இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் ஆலய பரிபாலன சபை, 17டீ,1/3,மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006.