14693 சமுதாய அகதிகள் (சிறுகதைகள்).

இளநெஞ்சன் முர்ஷிதீன். கொழும்பு 10: அல்லாமா இக்பால் பப்ளிகேஷன்ஸ், 239, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு 12: வீனஸ் பிரின்டர்ஸ்). 116 பக்கம், விலை: ரூபா 67.50, அளவு: 18.5×13 சமீ. தினபதி ஆசிரிய பீடத்தில் சிலகாலம் பணியாற்றிய B.M.முர்ஷிதீன் எழுதிய இஸ்லாமிய தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவை சிந்தாமணி வார மஞ்சரியில் பிரசுரமானவை. சமாதானப் பரிசு, வசந்தத்தை தேடும் மலர்கள், வாசமிலா ரோசாவொன்று, ஒரு பொருளுக்காக, காணாமல் போன நியாயங்கள், உண்மைகள் அழுகின்றன, சமுதாய அகதிகள், அவர்களும் நம்மவர்களே, வெளிச்சத்துக்கு வந்த உணர்வுகள், புதிய எழுச்சி, அறிமுகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இடையிடையே இவரது சிறுகதைகள் பற்றிய கருத்துரைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21630).

ஏனைய பதிவுகள்

Stendra 200 mg generico per ordine Stendra 200 mg in farmacia Il costo di Avanafil Norvegia Acquista 200 mg Stendra Belgio Come acquistare Stendra online

14263 பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்.

ஜோ.கருணேந்திரா, து.கௌரீஸ்வரன், சு.நிர்மலவாசன், சி.ஜெயசங்கர், கமலாவாசுகி (தொகுப்பாசிரியர் குழு). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு, இல.30, பழைய வாடிவீட்டு வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம்

14960 முருகையன் எனும் முடியா நெடும்பகல்: கவிஞர் இ.முருகையன் நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 11: தேசியகலை இலக்கியப் பேரவை, இல.44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுலை 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம்,