எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ். பண்டாரகம: எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ், அப்ழல் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 118 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955- 99258-2-8. இந்நூலில் கற்பாரைகளும் கரையும், பாலகன், அப்பா, சுவர்க்கத்து நறுமணம், எதிர்பார்ப்பு, தலநஸீபு, அஸ்தமிக்கும் அதிகாரங்கள், மனிசத்தனம், நிராசை, வேகும் உள்ளங்கள், முகங்கள், விட்டில் பூச்சிகள் ஆகிய 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. ஹிதாயத்துள்ளாஹ் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகமவைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணியாற்றும் இவர், சட்டத்துறையில் பட்டப்படிப்பை நிறைவுசெய்து சட்டத்தரணியாகவும் உள்ளார். 1995 முதல் இலக்கியப் புலத்தில் இயங்கிவரும் இவர் மாவட்ட, தேசிய ரீதியில் பரிசுகளையும் பெற்றவர். இவரது முதலாவது “நூல் விரியத் துடிக்கும் மொட்டுக்கள்”- 2005இல் வெளிவந்தது.
13001 கலைச்சொற்கள் கணனி விஞ்ஞானம்: ஆங்கிலம்-தமிழ்.
க.குணரத்தினம், இ.முருகையன், சு.கனகநாதன், சி.மகேசன் (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: ஸ்பார்ட்டன் கிராப்பிக்ஸ்). (4), 17 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.