எம்.எம்.நௌஷாத். சம்மாந்துறை: தேசிய கலை இலக்கியத் தேனகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (கொழம்பு 10: லீட் பிரின்டர்ஸ்). xxxiv, 404 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 750., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-3966-00-1. கடந்த 35 வருடங்களாக எழுதப்பட்டவையான ஆசிரியரின் 33 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. வைத்தியரான நூலாசிரியர் வைத்தியத்துறைசார்ந்த சில சுவாரஸ்யமான கதைகளையும் இங்கு தந்துள்ளார். காதல் கதைகளும், உளவளத்துணை சார்ந்த கதைகளும், அங்கதக் கதைகளுமாக இந்நூல் பல்வேறு ரசனைப் பொலிவுகளுடன் வாசகருக்கு விருந்தாகியுள்ளது. சிலசமயங்களில் எமக்குள் எழுகின்ற தத்துவ விசாரங்களுக்கும் குடும்பச் சிக்கல்களுக்கும் பரிகாரம் தேடித்தருபவையாகவும் சில கதைகளைக் காணமுடிகின்றது. கல்முனை சீ.ருத்ராவின் ஓவியங்கள் ஒவ்வொரு கதைக்கும் அழகூட்டுகின்றன. இத்தொகுதியில் ஆசிரியர் எழுதிய அதிதுடிமை குணாம்சம், அரசனும் அரசனும் நிறுவனம், அழகு என்பதற்கான நிறமூர்த்த ஒழுங்கு, அன்டிலோப்பின் நளினநடை, இரு வீடுகள் உள்ள ஒரு கிராமம், எலும்புக்கூடு சித்தாந்தம், கசாப்புக் கடைக்காரனும் கணிதப் பேராசிரியரும் தத்துவஞானியும், கடிகாரம் களவுபோயிற்று, இருபதாம் நூற்றாண்டுக் கணவன்மார்கள், காணாமற்போகக் கடவாய், காலத்தைத் தொலைத்தவர்கள் செல்லுமிடம், சின்ன மனிதர்கள் வாழும் தீவு, மரப்பாச்சியின் செல்லக் குழந்தை, சொர்க்க மயானத்திலே நாட்டுப்புறத்தான், ஞவர்களும் ஙவர்களும், உன் பெயர் என்ன?, தீர்க்கதரிசியின் புதிய முகவரி, நாகபாம்பு மனைவி, நிழலைப்பிடிக்க ஓடுகிறேன், நைல்நதிக் குழந்தை, நோயாளியும் பஞ்சுமிட்டாயும், மலையுச்சி பங்களாவாசிகள், ஒரு பற்குச்சி சமாச்சாரம், திருமதி பூச்சியியலாளன், 1989 மரணபீதியும் அச்சவியலும்-திறப்பின் மீள்வருகை, மலைக்கு அப்பால் யுத்தம் நடக்கிறது, முன்னொரு காலத்து யானை, மெர்ஸ லீனாவுக்கு மோட்சம், மனசு ஒடிந்த நகரம், விருத்தோப்பியனின் சவப்பெட்டி, வீரர்கள் அழிவதில்லை, ஜன்னலில் குடியிருத்தல், கசாப்புக் கடையில் புல்புல் பறவை ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன.