14731 வானம்பாடியும் ரோஜாவும்.

கெக்கிறாவ ஸுலைஹா. கெகிறாவ: கெக்கிறாவ ஸுலைஹா, 32/21, செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xi, (3), 78 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955- 53263-2-2. அம்ரிதா ப்ரிதம் எழுதிய “மண்ணெண்ணெய் நெடி”, ஆர்.கே.நாராயணன் எழுதிய “அந்த இருப்பிடம்”, ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய “மழையில் நனைந்த பூனை”, என்டன் செக்கோவ் எழுதிய “தும்மல்”, என்டன் செக்கோவ் எழுதிய “அந்த வளைந்த கண்ணாடி”, ப்ரேம்சந்த் எழுதிய “தாகூரின் கிணறு”, ஜேம்ஸ் ஜொய்ஸ் எழுதிய “ஈவ்லின்”, கேட் வோல்கர் எழுதிய “காதற் கடிதங்கள்”, ஒஸ்கார் வைல்ட் எழுதிய “வானம்பாடியும் ரோஜாவும்”, வில்லியம் சோமசெட் மோம் எழுதிய “மச்சத்துடனான அம்மனிதன்” ஆகிய பத்துச் சிறுகதைகள் இந்நூலில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன. பெண்ணுக்குள் மறைந்து நிற்கும் காதலின் தவிப்பும், அவளது சிதைக்கப்பட்ட மனோச் சித்திரங்களும், அறியாமையினால் பெண் விடும் தவறுகளும், ஆக்கிரமிப்பின் பூதக் கரங்களில் நசுங்கிச் சிதையும் அவளது வாழ்வுகளும், அடுத்தவரின் வக்கிரங்களுக்குள் சிதைந்துபோன, தொலைந்துபோன பெண்ணவளின் தன்மான உணர்ச்சிகளும் இக்கதைகளை எம்மவருக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவருகின்றன.

ஏனைய பதிவுகள்

12895 – பொன் அம்பலம்: அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் நினைவு மலர்.

க.ஆறுமுகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: அமரர் கதிர்காமர் பொன்னம்பலம் நினைவுக்குழு, 62, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31 கியூ லேன்). (6), 148 பக்கம்,

12947 – பாடிப்பறந்த குயில்கள் (மறைந்த 98 இசைக்கலைஞர்களின் சரிதம்).

முருகு. (இயற்பெயர்: ச.முருகையா). யாழ்ப்பாணம்: ச.முருகையா, வாஹினி பிரசுராலயம், 45 சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆவணி 2016. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், பிரவுண் வீதி). xv, 303 பக்கம், புகைப்படங்கள், விலை:

14126 சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சத்தியமான 18 படிகள்: 18ஆவது ஆண்டு மண்டலபூஜை சிறப்பு மலர்-1993.

க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பன் இல்லம், இல. 69, வன்றோயன் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (கொழும்பு 12:

14999 கண்ணதாசன் பயணங்கள்.

கண்ணதாசன். சென்னை 600017: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஜுன் 2013. (சென்னை 5: புரோஸ்ஸ் இந்தியா). 144 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு:

14069 சைவ சமய வாழ்வியற் சிந்தனைகள்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: சரவணமுத்து அம்பலவாணர் அந்தியேட்டித் தின வெளியீடு,சாயுடை, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2004. (கொழும்பு 13: கீதாபதிப்பகம்). xx, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. கலாபூஷணம்

14153 நல்லைக்குமரன் மலர் 2011.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2டB, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). ஒ, 176 + (56) பக்கம், புகைப்படங்கள்,