14732 அபோபிஸ்-2036 (விஞ்ஞான நாவல்).

எம்.எஸ்.எம். ஜிப்ரி. கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-56 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-3065-8. அபோபிஸ் என்ற இராட்சத விண்கல் (Asteroid Apophis) பற்றிய விடயம் முதலில் 2004ஆம் ஆண்டு மொஸ்கோ விண்ணியல் விஞ்ஞானிகளுக்குத் தெரியவந்துள்ளது. சுமார் 1150 அடி விட்டம் கொண்ட இவ்விண்கல் கி.பி.2029ஆம் ஆண்டு பூமிக்கு சுமார் 3,00,000 கி.மீ. தூரத்தில் வந்து செல்வதோடு கி.பி.2036ஆம் ஆண்டு பூமியில் மோதி பெரும் அநர்த்தத்தையும் உண்டாக்கும் என்று ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகளும் அமெரிக்க நாசா விஞ்ஞானிகளும் எதிர்வு கூறியுள்ளனர். இவ்வாறு இந்த விண்கல் பூமியில் மோதும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்திலுள்ள தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகள் முற்றாக அழிவதோடு அப்பிரதேசம் பாலைவனமாகிவிடும் என்றும் அஞ்சப்படுகின்றது. அத்துடன் உலகின் பெரும்பாலான பிரதேசங்களில் பூமியதிர்ச்சியுடன் சுனாமி ஏற்படுவதோடு இலட்சக்கணக்கான மக்களும் உயிரிழக்கும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப் படுகின்றது. 2036ஆம் ஆண்டளவில் நிகழவிருக்கும் இச்சம்பவத்துடன் பின்னப்பட்டு உலகிலும், விண்ணிலும் ஏற்படும் அரசியல் பொருளாதார, தொழில்நுட்ப, புவியியல் மாற்றங்களையும் கருத்திற்கொண்டு இப்புனைகதை எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65509).

ஏனைய பதிவுகள்

12307 – கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள்.

சோ.சந்திரசேகரன். மதுரை 625020: கவிதா பதிப்பகம், 4/825, நேரு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மதுரை 625001: விவேகானந்தா பிரஸ், 48, மேலைமாசி வீதி). (8), 56 பக்கம், விலை: இந்திய ரூபா

14359 சிந்தனை தொகுதி Xiii, இதழ் 2.(ஜுலை 2000).

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்), கே.சிவானந்தமூர்த்தி (இணை ஆசிரியர்), ஏ.எஸ்.சூசை (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். கொம்பியூட்டர் அன் ஓப்செட் பிரின்டர்ஸ், 537 சிவன்கோவில்

14260 யாத்திரை: சமூக ஆய்விற்கான இலங்கைச் சங்கத்தினது ஆய்விதழ்.

ஆர். ஒபயசேகரா, எம்.சின்னத்தம்பி, கே.டியுடர் சில்வா (ஆசிரியர்கள்). பேராதனை: எம்.சின்னத்தம்பி, சமூக ஆய்வுக்கான இலங்கைச் சங்கம், பொருளியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1992. (கண்டி: றோயல் பிரிண்டர்ஸ், 190, கொழும்பு வீதி).எi,

12084 – மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்: வெள்ளிவிழா மலர் 1968-1993.

த.செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: இந்து இளைஞர் மன்றம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). xxxx, (2), 65 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12155 – தேவார திருவாசகத் திரட்டு: உரையுடன்.

ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை (பொழிப்புரை, தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 3வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, விகிர்தி வருடம் 1950. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). (4), 68 பக்கம், விலை: 65 சதம்,