எம்.எஸ்.எம். ஜிப்ரி. கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-56 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-3065-8. அபோபிஸ் என்ற இராட்சத விண்கல் (Asteroid Apophis) பற்றிய விடயம் முதலில் 2004ஆம் ஆண்டு மொஸ்கோ விண்ணியல் விஞ்ஞானிகளுக்குத் தெரியவந்துள்ளது. சுமார் 1150 அடி விட்டம் கொண்ட இவ்விண்கல் கி.பி.2029ஆம் ஆண்டு பூமிக்கு சுமார் 3,00,000 கி.மீ. தூரத்தில் வந்து செல்வதோடு கி.பி.2036ஆம் ஆண்டு பூமியில் மோதி பெரும் அநர்த்தத்தையும் உண்டாக்கும் என்று ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகளும் அமெரிக்க நாசா விஞ்ஞானிகளும் எதிர்வு கூறியுள்ளனர். இவ்வாறு இந்த விண்கல் பூமியில் மோதும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்திலுள்ள தாவரங்கள், விலங்குகள், நீர்நிலைகள் முற்றாக அழிவதோடு அப்பிரதேசம் பாலைவனமாகிவிடும் என்றும் அஞ்சப்படுகின்றது. அத்துடன் உலகின் பெரும்பாலான பிரதேசங்களில் பூமியதிர்ச்சியுடன் சுனாமி ஏற்படுவதோடு இலட்சக்கணக்கான மக்களும் உயிரிழக்கும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப் படுகின்றது. 2036ஆம் ஆண்டளவில் நிகழவிருக்கும் இச்சம்பவத்துடன் பின்னப்பட்டு உலகிலும், விண்ணிலும் ஏற்படும் அரசியல் பொருளாதார, தொழில்நுட்ப, புவியியல் மாற்றங்களையும் கருத்திற்கொண்டு இப்புனைகதை எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65509).
Casino Bonus Ohne Einzahlung In Österreich
Content Die Besten 5 Tipps Zu 50 Freispielen Ohne Einzahlung – kostenlose Spins keine Einzahlung Online Slots Schritte, Um 15 Euro Bonus Zu Bekommen Wie