14743 இரண்டகன்?.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு டிசம்பர் 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-244- 54706-6. பிரவேசம், அறிமுகம், சுவை புதிது, புதிய நாள், தொடர்கதை, அடுத்தநாள், பறக்க நினைத்த பட்சி, தொடர்ந்த சோதனை, மருத்துவக் கல்லூரி, அகப்பட்ட அபலைகள் ஆகிய 10 அத்தியாயங்களில் இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. “தியாகிகள் துரோகிகள் என்பது இன்றும் வாதப் பொருளாய்த் தொடரும் எமது சமுகத்தில் இனியாவது அதற்கான அர்த்தத்தைக் கண்டு கொள்வார்களா என்னும் ஏக்கத்தோடு இருக்கும் எமது உறவுகளுக்கு, இது என் அலசலுக்கான உந்துகோலும் சமர்ப்பணமும்.” (ஆசிரியர்). தியாகலிங்கம் இலங்கையின் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஷ்ட பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் ஆற்றிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Desktop

Articles Where to Download The book Away from Ra Luxury Slot? And this Online casinos Offer Book Away from Ra Position The real deal Currency?