14745 உயிரில் கலந்த வாசம்.

க.சட்டநாதன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆடி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 105 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 3491-20-6. சட்டநாதன், ஈழத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்பட்டவர். சிறந்த பல சிறுகதைகளைத் தந்த அவரது முதலாவது நாவலாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நாவல் ஒரு தனிமனிதனின் சுயசரிதையாக விரிகின்றது. தனது மனைவியாரை கதையின் நாயகியாக்கி இனிய காதலர்களின் கதையாக நனவிடைதோய்ந்து இதனை வளர்த்துச் சென்றுள்ளார். வேலணை மண்ணின் ஈரமும், யாழ்ப்பாண மனிதர்களின் மனங்களும், மத்தியதர மனிதர்களின் வாழ்வியற்புலமும் சிறப்பாக இந்நாவலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கதைக்களம் வேலணை மண்ணிலிருந்து தமிழகம் வரை விரிந்துசெல்கின்றது. மனித மனத்தின் ஆசைகள், நிலைகுலைவுகள், பல்வேறுபட்ட சமூகநிலைப்பட்ட அனுபவங்கள் என்பன கதையை சுவாரஸ்யமாக வளர்த்துச் செல்கின்றது. இந்நாவல் கழிவிரக்கம் மிகுந்த மனோரதியக் கசிவுகளைக் கொண்டிருப்பதான தோற்றத்தைத் தந்தபோதும் அப்படி அல்ல என்று வாசகர்களுக்குச் சொல்லவேண்டும் என்று குறிப்பிடுகிறார் நாவலாசிரியர் சட்டநாதன்.

ஏனைய பதிவுகள்

14600 குறுக்கால போவானே கோதாரி விழுவானே.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). viii, 62 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

Google Pay

Content Novoline Gebührenfrei Aufführen Sozusagen Payout Casinos That You Should Avoid Can I Trust Casino Apps Notlage On The Play Store Erreichbar Casino Reviews Die

12300 – கல்வி முகாமைத்துவம்(தொடர் 1).

எம்.செல்வராஜா. மஹரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தி ஆலோசனைக் கழகம், கௌரி வெளியீட்டு இல்லம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம், 18, பிரின்ஸ் வீதி). 44 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14847 திருவள்ளுவர் எனும் தெய்வீக முகாமையாளர்.

காரைக்கவி கந்தையா பத்மானந்தன் (தொகுப்பாசிரியர்). காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital, 14, அத்தபத்து டெரஸ்). xxii, 139 பக்கம், விலை: ரூபா