க.சட்டநாதன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆடி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 105 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 3491-20-6. சட்டநாதன், ஈழத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்பட்டவர். சிறந்த பல சிறுகதைகளைத் தந்த அவரது முதலாவது நாவலாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நாவல் ஒரு தனிமனிதனின் சுயசரிதையாக விரிகின்றது. தனது மனைவியாரை கதையின் நாயகியாக்கி இனிய காதலர்களின் கதையாக நனவிடைதோய்ந்து இதனை வளர்த்துச் சென்றுள்ளார். வேலணை மண்ணின் ஈரமும், யாழ்ப்பாண மனிதர்களின் மனங்களும், மத்தியதர மனிதர்களின் வாழ்வியற்புலமும் சிறப்பாக இந்நாவலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கதைக்களம் வேலணை மண்ணிலிருந்து தமிழகம் வரை விரிந்துசெல்கின்றது. மனித மனத்தின் ஆசைகள், நிலைகுலைவுகள், பல்வேறுபட்ட சமூகநிலைப்பட்ட அனுபவங்கள் என்பன கதையை சுவாரஸ்யமாக வளர்த்துச் செல்கின்றது. இந்நாவல் கழிவிரக்கம் மிகுந்த மனோரதியக் கசிவுகளைக் கொண்டிருப்பதான தோற்றத்தைத் தந்தபோதும் அப்படி அல்ல என்று வாசகர்களுக்குச் சொல்லவேண்டும் என்று குறிப்பிடுகிறார் நாவலாசிரியர் சட்டநாதன்.