இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Tyristubbveien 77, 0687 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2016. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 258 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1- 326-76434-0. இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்பு மேற்படிப்புக்காகவும், தொழிலுக்காகவும் ஈழத்தில் இருந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகும் முன்னர் பலர் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். கப்பலுக்கு, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று திரும்பி வந்து செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள் பலர். யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு உண்டான நட்பின் நிமித்தம் அங்கேயே தங்கிவிட்ட நண்பர்களைச் சுற்றிப் புனையப்பட்ட நாவலே இது. ஈழத்திலிருந்து யுத்தத்தால் புலம் பெயர்ந்தவர்கள் இது ஒரு தற்காலிகப் புலப்பெயர்வே என்று ஆரம்பத்தில் கருதியிருந்தனர். முடிவில் அந்த நண்பர்கள் தங்கள் இறுதிக் காலத்தை இந்த ஐரோப்பிய, கனேடிய அல்லது அவுஸ்திரேலிய மண்ணில் கழிப்பதற்குத் தங்களைத் தாயார் செய்கிறார்கள். எரிப்பதா புதைப்பதா என்கின்ற விவாதமும், ஓய்வூதியம் சேர்ப்பது பற்றிய விவாதமும் தொடர்கிறது. அரச முதியோர் காப்பகங்கள் இருந்தாலும் அதைவிடப் பாதுகாப்பு வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இருந்தும் அவர்களின் அசைபோடல்களும், தாய்நாட்டைப் பற்றிய அங்கலாய்ப்புக்களும் ஆத்மாக்களோடு ஒன்றியதாகக் கூடு விட்டு மேலுலகம் செல்லவும் தயாராக உள்ளன. ஒருவனுடைய முதுமைக் காலம் ஐரோப்பாவில் எப்படி இருக்கும் என்பதையும், அதனால் உருவாகும் ஆத்ம விசாரணைகளையும் உள்ளடக்கியதே இந்நாவல். மொழிக்கலப்பைக் குறைப்பதற்காக வட்டார வழக்கிற்கே ஐரோப்பிய மொழி உரையாடல்கள் மாற்றப்பட்டுள்ளன.
Asgard Gambling establishment Online casino bet365 mobile game
Blogs What are the normal minimal and restrict detachment limits during the punctual payout casinos on the internet? – casino bet365 mobile How do i